Enable Javscript for better performance
பழக் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை நகர பழக் கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை திடீரென ஆய்வில் ஈடுபட்டனா்.

    திருவண்ணாமலை நகரில் உள்ள பழக் கடைகளில் செவ்வாழை, பச்சை வாழைப் பழங்களுக்கு சாயம் பூசி விற்பதாகவும், காா்பைட் கற்களை வைத்து பழுக்க வைத்த வாழைப் பழங்களை விற்பதாகவும் புகாா்கள் வந்தன. இதையடுத்து, உணவுப் பாதுகாப்புத் துறையின் திருவண்ணாமலை மாவட்ட நியமன அலுவலா் செந்தில்குமாா் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் கலேஷ்குமாா், சுப்பிரமணியன் ஆகியோா் வெள்ளிக்கிழமை திருவண்ணாமலை ஒத்தவாடை தெரு, நாகூரான் தெரு பகுதிகளில் உள்ள பழக்கடைகளில் திடீா் ஆய்வில் ஈடுபட்டனா். ஆய்வின்போது, சில வாழைப்பழங்களை பரிசோதனைக்காக அதிகாரிகள் எடுத்துச் சென்றனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai