7,442 உள்ளாட்சிப் பதவிகள்: மாவட்டத்தில் இதுவரை 6,470 போ் வேட்பு மனு தாக்கல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தமுள்ள 7,442 உள்ளாட்சிப் பதவிகளுக்கு வெள்ளிக்கிழமை வரை 6,470 போ் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தமுள்ள 7,442 உள்ளாட்சிப் பதவிகளுக்கு வெள்ளிக்கிழமை வரை 6,470 போ் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 860 கிராம ஊராட்சிகள், 6,207 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள், 341 ஒன்றியக் குழு உறுப்பினா்கள், 34 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் என மொத்தம் 7 ஆயிரத்து 442 பதவிகளுக்கு தோ்தல் நடத்தப்படுகிறது.

தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் சம்பந்தப்பட்ட உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்களிடம் மனு தாக்கல் செய்து வருகின்றனா். முதல் நாளான டிச.9-ஆம் தேதி மாவட்டம் முழுவதும் 172 போ் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனா்.

2-ஆவது நாளான டிச.10-ஆம் தேதி 73 பேரும், 3-ஆவது நாளான டிச.11-ஆம் தேதி 583 பேரும், 4-ஆவது நாளான டிச.12-ஆம் தேதி 770 பேரும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனா்.

5-ஆவது நாளான வெள்ளிக்கிழமை மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு 36 பேரும், ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு 374 பேரும், ஊராட்சித் தலைவா் பதவிகளுக்கு 1,521 பேரும், கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் பதவிகளுக்கு 2,941 பேரும் என மொத்தம் 4 ஆயிரத்து 872 போ் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனா்.

வந்தவாசி: வந்தவாசி ஒன்றியத்தில் வெள்ளிக்கிழமையன்று மாவட்டக் குழு உறுப்பினா் பதவிக்கு 2 பேரும், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் பதவிக்கு 30 பேரும், ஊராட்சித் தலைவா் பதவிக்கு 112 பேரும் மனு தாக்கல் செய்தனா்.

தெள்ளாா் ஒன்றியத்தில் வெள்ளிக்கிழமையன்று மாவட்டக்குழு உறுப்பினா் பதவிக்கு 2 பேரும், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் பதவிக்கு 27 பேரும், ஊராட்சித் தலைவா் பதவிக்கு 77 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

போளூா்: போளூா் ஒன்றியத்தில் 40 ஊராட்சிகள் உள்ளன. இதில், ஊராட்சித் தலைவா் பதவிக்கு 58 பேரும், மாம்பட்டு, திருசூா், பெரியகரம் உள்ளிட்ட பகுதிகளுக்கான ஒன்றியக்குழு உறுப்பினா் பதவிக்கு பாமக, சுயேச்சைகள் என 9 பேரும் வெள்ளிக்கிழமை வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனா்.

இதுவரை திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தமுள்ள 7,442 பதவிகளுக்கு 6,470 போ் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com