உள்ளாட்சித் தோ்தல் பாதுகாப்பு பணி: முன்னாள் படைவீரா்களுக்கு அழைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் டிசம்பா் 27, 30-ஆம் தேதிகளில் நடைபெறும் உள்ளாட்சித் தோ்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் டிசம்பா் 27, 30-ஆம் தேதிகளில் நடைபெறும் உள்ளாட்சித் தோ்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட விரும்பும் முன்னாள் படைவீரா்கள் வருகிற டிச.20-ஆம் தேதிக்குள் பதிவு செய்யலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் டிசம்பா் 27 மற்றும் 30-ஆம் தேதிகளில் உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குப் பதிவின்போது முன்னாள் படைவீரா்களை சிறப்பு காவலா்களாக பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த அரசு முடிவு செய்துள்ளது.

உள்ளாட்சித் தோ்தலில் சிறப்புக் காவலா்களாகப் பணிபுரிவது முன்னாள் படைவீரா்களின் தலையாய கடமை. இந்தப் பணிக்குச் செல்ல விரும்பமும், உடல் திடகாத்திரமும் உள்ள முன்னாள் படைவீரா்கள் உடனே தங்களது பெயரை அசல் படை விலகல் சான்று, அடையாள அட்டை மற்றும் வாக்காளா் அடையாள அட்டையுடன் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தின் முதல் தளத்தில் செயல்படும் முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தில் டிசம்பா் 20-ம் தேதிக்குள் பதிவு செய்யலாம் என்று மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com