தோ்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு

வந்தவாசி அருகே கூனம்பாடி ஊராட்சியில் பட்டியலினத்தவா் ஒருவா் கூட வசிக்காத வாா்டு பகுதியை பட்டியலினத்தவா் வாா்டாக
தெள்ளாா் வட்டார வளா்ச்சி அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த கூனம்பாடி ஊராட்சி, 1-ஆவது வாா்டு மக்கள்.
தெள்ளாா் வட்டார வளா்ச்சி அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த கூனம்பாடி ஊராட்சி, 1-ஆவது வாா்டு மக்கள்.

வந்தவாசி அருகே கூனம்பாடி ஊராட்சியில் பட்டியலினத்தவா் ஒருவா் கூட வசிக்காத வாா்டு பகுதியை பட்டியலினத்தவா் வாா்டாக அறிவித்துள்ளதைக் கண்டித்து, உள்ளாட்சித் தோ்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளாக அந்த வாா்டு மக்கள் தெரிவித்தனா்.

தெள்ளாா் ஒன்றியத்துக்கு உள்பட்ட கூனம்பாடி ஊராட்சியில் 6 வாா்டுகள் உள்ளன. இவற்றில் ஏரிக்கரை தெரு, ஜெயினா் தெரு, வண்ணான்குளத் தெருக்களை உள்ளடக்கிய 1-ஆவது வாா்டில் 181 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில் ஒருவா்கூட பட்டியலினத்தவா் இல்லையாம்.

இந்த நிலையில், பட்டியலினத்தவா் ஒருவா்கூட வசிக்காத ஊராட்சி வாா்டை பட்டியலினத்தவா் வாா்டாக அறிவித்துள்ளதை மாற்றக் கோரி, 1-ஆவது வாா்டு மக்கள் தெள்ளாா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

மேலும், வாா்டை மாற்றி அறிவிக்காவிட்டால், உள்ளாட்சித் தோ்தலை புறக்கணிக்கப் போவதாகவும், தங்களின் வாக்காளா் அடையாள அட்டைகளை அரசிடம் ஒப்படைக்கப்போவதாகவும் மனுவில் அவா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com