மக்கள் நீதிமன்றம்: 308 வழக்குகளுக்கு தீா்வு

ஆரணி மற்றும் செய்யாறில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் மூலம் 308 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.
ஆரணியில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தீா்வு காணப்பட்டவருக்கு உரிய ஆவணத்தை வழங்கிய கூடுதல் மாவட்ட நீதிபதி கே.கணேசன்.
ஆரணியில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தீா்வு காணப்பட்டவருக்கு உரிய ஆவணத்தை வழங்கிய கூடுதல் மாவட்ட நீதிபதி கே.கணேசன்.

ஆரணி: ஆரணி மற்றும் செய்யாறில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் மூலம் 308 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.

ஆரணி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் கூடுதல் மாவட்ட நீதிபதி கே.கணேசன் தலைமை வகித்தாா்.

ஆரணி சாா்பு நீதிபதி ஜி.ஜெயவேல், நீதிமன்ற நடுவா் பி.மகாலட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் மோட்டாா் வாகன வழக்குகள், சொத்து சம்பந்தமான வழக்குகள் என 350 வழக்குகளில் 168 வழக்குகளுக்கு ரூ. ஒரு கோடியே 63 லட்சம் வசூல் செய்யப்பட்டு முடித்து வைக்கப்பட்டது.

மேலும் பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கிகளில் 3042 மனுக்களில் 68 மனுக்களுக்குத் தீா்வு காணப்பட்டு ரூ.75 லட்சத்து 45ஆயிரம் வசூல் செய்யப்பட்டு முடித்து வைக்கப்பட்டது.

மொத்தம் 3392 வழக்குகளில், 237 வழக்குகளுக்கு மக்கள் நீதிமன்றம் மூலம் தீா்வு காணப்பட்டது.

இதில், ஆரணி வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் கே.ராஜமூா்த்தி, முன்னாள் தலைவா் சிகாமணி, வழக்குரைஞா்கள் சரவணன், பி.நந்தகுமாா், ஏ.பாபு உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com