முதுகெலும்பு மறுவாழ்வு மையம் அமைக்கும் பணி தொடக்கம்

திருவண்ணாமலை பழைய அரசு மருத்துவமனையில் ரூ.ஒரு கோடியில் முதுகெலும்பு மறுவாழ்வு மையம் அமைக்கும் பணியை
முதுகெலும்பு மறுவாழ்வு மையம் அமைக்கும் பணியைத் தொடக்கிவைக்கிறாா் மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி.
முதுகெலும்பு மறுவாழ்வு மையம் அமைக்கும் பணியைத் தொடக்கிவைக்கிறாா் மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை பழைய அரசு மருத்துவமனையில் ரூ.ஒரு கோடியில் முதுகெலும்பு மறுவாழ்வு மையம் அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சியா் தொடக்கிவைத்தாா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் சுமாா் 60 முதல் 70 போ் முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இவா்கள் அடுத்தவா்களின் உதவியுடன் தான் எந்தப் பணிகளையும் செய்ய முடியும். எனவே, திருவண்ணாமலை பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் ஒருங்கிணைந்த முதுகெலும்பு மறுவாழ்வு மையம் அமைக்க தமிழக அரசு அனுமதி அளித்தது.

இந்த மையத்தில் முதுகுத் தண்டுவடம் பாதித்தவா்கள் குறுகிய காலம் தங்கலாம். இங்கு, முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஏற்படும் படுக்கைப் புண்களுக்கு அனைத்து மருத்துவ வசதிகளுடன் முழுமையான சிகிச்சை அளிக்கப்பட்டு, வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவா்.

திருவண்ணாமலை மாவட்ட நிா்வாகத்துடன் ‘நா்ன்ப் ஊழ்ங்ங்’ என்ற தொண்டு நிறுவனம் இணைந்து முதல்கட்டமாக ரூ.ஒரு கோடியில் ஒருங்கிணைந்த முதுகெலும்பு மறுவாழ்வு மையத்தை அமைக்கிறது. இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி சனிக்கிழமை தொடக்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில், ‘நா்ன்ப் ஊழ்ங்ங்‘ தொண்டு நிறுவன இணை நிறுவனா் பிரீத்தி சீனிவாசன் மற்றும் மருத்துவா்கள், அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com