இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 06th February 2019 10:46 AM | Last Updated : 06th February 2019 10:46 AM | அ+அ அ- |

மக்கள் நலக் கோரிக்கைகளை வலியுறுத்தி, சேத்துப்பட்டு வட்டாட்சியர் அலுவலகம் எதிரே இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் வட்டத் தலைவர் மணிவண்ணன் தலைமை வகித்தார். நகரச் செயலர் சங்கர், மாவட்டக் குழு உறுப்பினர் அந்தோணிகுருஸ், பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சங்கர் வரவேற்றார். மாவட்டச் செயலர் பாஸ்கரன், மாவட்டத் தலைவர் சிவராஜ் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையை பொது மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். சேத்துப்பட்டு வட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் சேத்துப்பட்டில் இருந்து அரசு நகர்ப் பேருந்து இயக்க வேண்டும்.
சேத்துப்பட்டு அருகில் உள்ள தவணி, மகாதேவிமங்கலம் ஆகிய கிராமங்களை சேத்துப்பட்டு வட்டத்தில் இணைக்க வேண்டும். சேத்துப்பட்டில் காய்கனி சந்தை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கந்தசாமி, வட்டச் செயலர்கள் சீதாராமன்(சேத்துப்பட்டு), வேலு (போளூர்), வட்டப் பொருளாளர் சிவா மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.