சுடச்சுட

  

  திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த இராட்டிணமங்கலம் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை மாடு விடும் திருவிழா நடைபெற்றது.
  இந்த விழாவில் வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த கம்மவான்பேட்டை, கீழ்அரசம்பட்டு, மூலக்காடு, சாத்துமதுரை, மெய்யூர், அடையபுலம், களம்பூர், போளூர் பகுதிகளிலிருந்து 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. இதில், வெற்றி பெற்ற அரசம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த காளை மாட்டின் உரிமையாளருக்கு ரூ.51ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. மேலும், 30 காளைகளின் உரிமையாளர்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை கிராம மக்கள், விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai