சுடச்சுட

  

  திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியராக ஸ்ரீதேவி பொறுப்பேற்றுக் கொண்டார்.
  திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியராகப் பணிபுரிந்து வந்தவர் சீ.தங்கவேலு. இவர், பணியில் இருந்தபோது உடல்நிலை பாதிக்கப்பட்டார். இதையடுத்து, நீண்ட விடுப்பில் இருந்தார். எனவே, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் உமா மகேஸ்வரி, திருவண்ணாமலை கோட்டாட்சியராகப் பொறுப்பு வகித்து வந்தார். இந்த நிலையில், திருச்சியில் பயிற்சி கோட்டாட்சியராக இருந்த ஸ்ரீதேவி, திருவண்ணாமலை கோட்டாட்சியராக மாற்றப்பட்டு, செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். இவருக்கு அலுவலக ஊழியர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai