சுடச்சுட

  

  போளூரை அடுத்த மண்டகொளத்தூர் ஊராட்சியில் செவ்வாய்க்கிழமை ஆற்றுத் திருவிழா நடைபெற்றது.
  மண்டகொளத்தூர் ஊராட்சியில் ஸ்ரீதர்மசம்வர்த்தினி அம்மன் சமேத ஸ்ரீதர்மநாதேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் ரத சப்தமியையொட்டி, இந்தக் கோயில் நிர்வாகம் சார்பில் ஆற்றுத் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
  அதன்படி, நிகழாண்டு ரத சப்தமியையொட்டி, மண்டகொளத்தூர் அருகே பாயும் செய்யாற்றில் ஆற்றுத் திருவிழா நடைபெற்றது. இதில், ஸ்ரீதர்மசம்வர்த்தினி அம்மன் சமேத ஸ்ரீதர்மநாதேஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.
  விழாவில், மண்டகொளத்தூர், வம்பலூர், அரும்பலூர், தேவிகாபுரம், ஓடநகரம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai