சுடச்சுட

    

    மோட்டார் சைக்கிள் கவிழ்ந்ததில் நெசவுத் தொழிலாளி சாவு

    By DIN  |   Published on : 13th February 2019 10:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செய்யாறு அருகே மோட்டார் சைக்கிள் கவிழ்ந்ததில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நெசவுத் தொழிலாளி உயிரிழந்தார்.
    காஞ்சிபுரம் வட்டம், பரனூர் கிராமத்தைச் சேர்ந்த நெசவுத் தொழிலாளி ஆறுமுகம் (40) 
    . இவர், கனிகிலுப்பை கிராமத்தில் உள்ள தனது உறவினர் பழனியை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் கடந்த 5-ஆம் தேதி சென்றார். பல்லாவரம் கிராம சுடுகாடு அருகே சென்றபோது, மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததாகத் தெரிகிறது. இதில், பலத்த காயமடைந்த ஆறுமுகம், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர், தீவிரச் சிகிச்சைக்காக செங்கல்பட்டு, சென்னை அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட ஆறுமுகம், திங்கள்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து தூசி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai