Enable Javscript for better performance
வங்கியில் பாதுகாவலர் பணி:முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    வங்கியில் பாதுகாவலர் பணி: முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்கலாம்

    By DIN  |   Published on : 13th February 2019 10:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்கள் யூனியன் வங்கிக் கிளைகளில் காலியாக உள்ள பாதுகாவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
    இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: யூனியன் வங்கிக் கிளைகளில் காலியாக உள்ள பாதுகாவலர் பணிக்கான ஆள்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். 
    இந்தப் பணிக்கு திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்கள் அனைவரும் www.unionbankofindia.co.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் பிப்ரவரி 18-ஆம் தேதி என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai