Enable Javscript for better performance
விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின்மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

    By DIN  |   Published on : 13th February 2019 10:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை மாவட்ட விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
    திருவண்ணாமலை பவளக்குன்று மடாலயத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு அமைப்பின் அகில இந்திய பொதுச் செயலர் மிலிந்த் பிராண்டே தலைமை வகித்தார். அகில பாரத இணைச் செயலர் கோபால் ரத்தினம், மாநிலத் தலைவர் சீனிவாசன், மாநிலச் செயலர் ஞானகுரு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    கூட்டத்தில்,  கலசப்பாக்கத்தை அடுத்த பர்வதமலையில் கிறிஸ்தவ மதத்தினர் சிலுவை வைத்துள்ளதை வன்மையாகக் கண்டிப்பது. திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலுக்கு புதிய யானை வாங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai