அரசுக் கல்லூரியில் பயிற்சி முகாம்
By DIN | Published On : 14th February 2019 10:15 AM | Last Updated : 14th February 2019 10:15 AM | அ+அ அ- |

திருவண்ணாமலை அரசு கலை, அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத் துறை, தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் இணைந்து இலக்கியம் வாயிலாக மொழிப் பெயர்ப்பு படிப்பினையைக் கற்பித்தல் என்ற தலைப்பிலான பயிற்சி முகாமை கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடத்தின.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் எம்.சின்னையா தலைமை வகித்தார். பேராசிரியர் கே.ஆர்.அறிவுச்செல்வி வரவேற்றார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் நா.ஜெகதீஸ்வரி பயிற்சி முகாமின் நோக்கம் குறித்து விளக்கினார்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகப் பதிப்பகத்தின் பதிப்பாசிரியர் மினிகிருஷ்ணன், சென்னை பல்கலைக்கழக படிப்பகத் துறைத் தலைவரும், சென்னை பல்கலைக்கழக ஆட்சிமன்றக்குழு உறுப்பினருமான வி.பாரதி ஹரிஷங்கர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு அறிவுரை வழங்கிப் பேசினர்.
இதில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், 50-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பயிற்சி முகாமில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில், ஆங்கில துறைத் தலைவர் ஜி.சிவப்பிரியா, பேராசிரியர் எல்.விஸ்வநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.