முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை
அரசுப் பள்ளிக்கு கல்விச் சீர் வழங்கிய பொதுமக்கள்
By DIN | Published On : 28th February 2019 09:36 AM | Last Updated : 28th February 2019 09:36 AM | அ+அ அ- |

வந்தவாசியை அடுத்த சேனல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு அந்தப் பள்ளியின் மேலாண்மைக் குழுவினர், பொதுமக்கள் சார்பில், ரூ.25 ஆயிரத்திலான கல்விச் சீர்வரிசைப் பொருள்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
இதில், சின்டெக்ஸ் குடிநீர்த் தொட்டி, வட்ட மர மேஜைகள், தொலைக்காட்சிப் பெட்டி, கல்வி, விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்டவை கல்விச் சீராக வழங்கப்பட்டன.
விழாவுக்கு தெள்ளாறு வட்டாரக் கல்வி அலுவலர் இல.இராஜகோபால் தலைமை வகித்தார். மேலும், கல்விச் சீர் வழங்கிய நன்கொடையாளர்களை அவர் பாராட்டிப் பேசினார். தெள்ளாறு வட்டார வள மைய மேற்பார்வையாளர் குணசேகரன், ஆசிரியப் பயிற்றுநர் சக்திவேல், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் சற்குணம், பள்ளித் தலைமை ஆசிரியர் டி.ஈ.ஏழுமலை, ஓய்வு பெற்ற ஆசிரியர் தேவதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.