முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை
ஆரணியில் அரசு நலத் திட்ட உதவிகள்: அமைச்சர் வழங்கினார்
By DIN | Published On : 28th February 2019 09:35 AM | Last Updated : 28th February 2019 09:35 AM | அ+அ அ- |

ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை அரசின் பல்வேறு நலத் திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வழங்கினார்.
ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் திருமண உதவித்தொகை 11 பேருக்கும், இயற்கை மரண நிவாரண உதவித்தொகை 11 பேருக்கும், கல்வி நிதி உதவித்தொகை 34 பேருக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கான இணைப்புச் சக்கரம் பொருத்திய ஸ்கூட்டர்கள் 10 பேருக்கும், குடும்ப அட்டை 15 பேருக்கும், செயற்கை கால், கை 7 பேருக்கும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வழங்கினார்.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார். இதில், செய்யாறு எம்எல்ஏ தூசி கே.மோகன், கோட்டாட்சியர் மைதிலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் ஆவின் பால் கூட்டுறவு சங்க துணைத் தலைவர் பாரிபாபு, அரசு வழக்குரைஞர் க.சங்கர், நகர, ஒன்றியச் செயலர்கள் அசோக்குமார், பி.ஆர்.ஜி.சேகர், எம்.வேலு, பாசறை நிர்வாகி கஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.