முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை
ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில் நல உதவிகள் அளிப்பு
By DIN | Published On : 28th February 2019 09:37 AM | Last Updated : 28th February 2019 09:37 AM | அ+அ அ- |

கலசப்பாக்கத்தை அடுத்த காஞ்சியில் புதன்கிழமை நடைபெற்ற ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில் பொதுமக்களுக்கு எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் நல உதவிகளை வழங்கினார்.
காஞ்சி கூட்டுச்சாலை அருகே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71-ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ஜெயலலிதா உருவப்படத்துக்கு எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார். பின்னர், பொதுமக்களுக்கு நல உதவிகள், அன்னதானம் ஆகியவற்றை எம்எல்ஏ வழங்கினார். நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட துணைச் செயலர் துரை, ஒன்றியக்குழு முன்னாள் துணைத் தலைவர் கருணாமூர்த்தி, ஒன்றியச் செயலர் புருஷோத்தமன் மற்றும் ஊராட்சிச் செயலர்கள், மகளிரணியினர், அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.