முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை
வாக்குப் பதிவு இயந்திரங்களின் செயல்பாடு: மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு
By DIN | Published On : 28th February 2019 09:38 AM | Last Updated : 28th February 2019 09:38 AM | அ+அ அ- |

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடு குறித்த விழிப்புணர்வு செயல்விளக்க நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
மக்களவைத் தேர்தலில் இந்தியாவின் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம், வாக்காளர் தாம் அளித்த வாக்கை உறுதி செய்யும் கருவி ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன.
இந்தக் கருவிகளின் பயன்பாடு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கல்லூரி மாணவ, மாணவிகளிடையே வாக்குப் பதிவு இயந்திரங்கள் குறித்த நேரடி செயல்விளக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார்.
உதவி ஆட்சியர் (பயிற்சி) மு.பிரதாப், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் பா.ஜெயசுதா, மருத்துவக் கல்லூரி முதல்வர் வாணி, மருத்துவமனைக் கண்காணிப்பாளர் எம்.ஏ.ஷகீல் அஹமது, துணைக் கண்காணிப்பாளர் பி.குப்புராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் அனைவரும் தாங்கள் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் வாக்குப்பதிவு செய்தவுடன் அளித்த வாக்கை உறுதி செய்யும் கருவியில் சரியாக வாக்களிக்கப்பட்டதா என்பதை தெரிந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், திருவண்ணாமலை வட்டாட்சியர், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவக் கல்லூரி மாணவர்கள், செவிலியர் கல்லூரி மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.