ஆரணி நகராட்சியில் ரூ.10 கோடியில் வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல்

ஆரணி நகராட்சியில் ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ், ரூ.10 கோடியிலான வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் புதன்கிழமை அடிக்கல்

ஆரணி நகராட்சியில் ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ், ரூ.10 கோடியிலான வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் புதன்கிழமை அடிக்கல் நாட்டினார்.
ஆரணி நகராட்சியில் ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ், ரூ.10 கோடியில் சாலை மேம்பாடு, கால்வாய் அமைத்தல் உள்ளிட்ட திட்டப் பணிகளுக்காக அடிக்கல் நாட்டு விழா ஆரணி கேசிகே நகர்ப் பகுதியில் நடைபெற்றது. 
இதில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பங்கேற்று அடிக்கல் நாட்டினார். பின்னர், இந்தப் பணிகளுக்காக சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
பணிகள் குறித்த விவரம் வருமாறு: ஆரணி நகராட்சி 1-ஆவது வார்டில் ரூ.2 கோடியே 47 லட்சத்தில் கே.சி.கே.நகர் - புதுகாமூர் சாலை, ஜெயம் நகர், கே.கே.நகர் பகுதிகளில் சிறு பாலத்துடன் கூடிய தார்ச்சாலை அமைத்தல், அன்னை சத்யா நகர், பழைய ஆர்க்காடு சாலைப் பகுதிகளில் 3,530 மீட்டர் நீளத்துக்கு சாலை அமைக்கும் பணி, வார்டு எண் 7-இல் ரூ.2 கோடியே 41 லட்சத்தில் தணிகாசலம் தெரு முதல் சத்தியமூர்த்தி சாலை வரையும், வார்டு எண் 8-இல் பரசுராமன் தெரு, வார்டு எண் 10-இல் நாராயணன் தெரு, வார்டு எண் 13-இல் அருணகிரிசத்திரம் முதல் தச்சூர் சாலை வரையும், வார்டு எண் 14-இல் வெங்கடேஷ்வரா நகர், மில்லர்ஸ் சாலை மற்றும் சபாஷ்கான் தெரு முதல் வெங்கடேஷ் நகர் பின்புறம் வரையும், வார்டு எண் 16-இல் பழனிஆண்டவர் கோயில் தெரு, வார்டு எண் 22-இல் சாமித்தெரு ஆகிய பகுதிகளில் 10 எண்ணிக்கையில் 4,130 மீட்டர் நீளத்துக்கு தார்ச் சாலை அமைக்கும் பணிகள் நடைபெறவுள்ளன.
வார்டு எண் 23-இல் ரூ. ஒரு கோடியே 81 லட்சத்தில் இளங்கோ தெரு, வார்டு எண் 24-இல் வி.எல்.டி நகர், வார்டு எண் 25-இல் சோலை நகர் ஆகிய பகுதிகளில் மழை நீர் வடிகால், சிறு பாலத்துடன் கூடிய தார்ச்சாலை, வார்டு எண் 20-இல் சூரியகுளம் தெற்கு, மேற்கு தெரு, வார்டு எண் 23-இல் தச்சூர் சாலை முதல் நகராட்சி நீர்த்தேக்கத் தொட்டிக்கான அணுகு சாலை, வார்டு எண் 24-இல் பாரதியார் தெரு, வார்டு எண் 25-இல் நாயக்கன்பாளையம், மலையாம்பட்டு சாலைப் பகுதிகளில் 8 சாலைகள் 3,600 மீட்டர் நீளத்துக்கு தார்ச்சாலை அமைத்தல் பணிகள் நடைபெறவுள்ளன.
இதேபோல, வார்டு எண்கள் 30, 27, 28, 26 32, 3 ஆகிய பகுதிகளிலும் சாலைப் பணிகள், பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் நடைபெறவுள்ளன. இந்தப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார். 
செய்யாறு எம்எல்ஏ தூசி கே.மோகன் முன்னிலை வகித்தார். 
ஆரணி கோட்டாட்சியர் மைதிலி, வேலூர் பால் கூட்டுறவு சங்க துணைத் தலைவர் பாரி பி.பாபு, அரசு வழக்குரைஞர் க.சங்கர், நகர, ஒன்றியச் செயலர்கள் எ.அசோக்குமார், பிஆர்ஜி.சேகர், எம்.வேலு, பாசறை மாவட்டச் செயலர் ஜி.வி.கஜேந்திரன், மாவட்ட துணைச் செயலர் டி.கருணாகரன், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் அ.கோவிந்தராசன், நகராட்சி ஆணையாளர் அசோக்குமார், வட்டாட்சியர் தமிழ்மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com