பிளஸ் 2 தேர்வு நாளை தொடக்கம்: 28,028 பேர் எழுதுகின்றனர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (மார்ச் 1) தொடங்கும் பிளஸ் 2 பொதுத் தேர்வை 28 ஆயிரத்து 28 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.


திருவண்ணாமலை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (மார்ச் 1) தொடங்கும் பிளஸ் 2 பொதுத் தேர்வை 28 ஆயிரத்து 28 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.
தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் மார்ச் 1-ஆம் தேதி தொடங்கி 19-ஆம் தேதி வரையும், பிளஸ் 1 தேர்வுகள் மார்ச் 6-ஆம் தேதி தொடங்கி 22-ஆம் தேதி வரையும், 10-ஆம் வகுப்புத் தேர்வுகள் மார்ச் 14-ஆம் தேதி தொடங்கி 29-ஆம் தேதி வரையும் நடைபெறுகின்றன.
திருவண்ணாமலை மாவட்டத்தில்...: திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வை 13 ஆயிரத்து 441 மாணவர்கள், 14 ஆயிரத்து 587 மாணவிகள் என மொத்தம் 28 ஆயிரத்து 28 பேரும், பிளஸ் 1 தேர்வை 13 ஆயிரத்து 240 மாணவர்கள், 14 ஆயிரத்து 558 மாணவிகள் என மொத்தம் 27 ஆயிரத்து 798 பேரும், 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 16 ஆயிரத்து 619 மாணவர்கள், 16 ஆயிரத்து 753 மாணவிகள் என மொத்தம் 33 ஆயிரத்து 372 பேரும் எழுதுகின்றனர்.
ஆய்வுக் கூட்டம்: இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் அரசு பொதுத் தேர்வுகளை எவ்வித புகார்களுக்கும் இடமின்றி நடத்துவது தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மாலையில் நடைபெற்றது. முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், வழித்தட அலுவலர்கள், வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்துக்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் தலைமை வகித்தார். பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் (இடைநிலை) ச.கோபிதாஸ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு கல்வித் துறை அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கிப் பேசினார்.
தேர்வு மையங்கள்: 10-ஆம் வகுப்பு தேர்வு எழுத திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் 128 தேர்வு மையங்களும், பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு எழுத 112 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com