தொண்டு நிறுவனம் சார்பில் பொதுமக்களுக்கு துணிப் பைகள்

திருவண்ணாமலை மாவட்ட பெட்காட் அமைப்பு (நுகர்வோர் அமைப்பு), ரீடு தொண்டு நிறுவனம் சார்பில், பொதுமக்களுக்கு துணிப் பைகள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.


திருவண்ணாமலை மாவட்ட பெட்காட் அமைப்பு (நுகர்வோர் அமைப்பு), ரீடு தொண்டு நிறுவனம் சார்பில், பொதுமக்களுக்கு துணிப் பைகள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருள்களுக்கு ஜனவரி 1 முதல் தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதுகுறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வும், பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப்பைகள் வழங்கும் விழாவும் திருவண்ணாமலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்ட பெட்காட் அமைப்பு, ரீடு தொண்டு நிறுவனம் சார்பில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக, மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் பொ.ரத்தினசாமி ஆகியோர் ரீடு தொண்டு நிறுவன நிர்வாகிகளிடம் துணிப்பைகளை வழங்கினர்.
இதைத் தொடர்ந்து, ரீடு தொண்டு நிறுவன இயக்குநரும், பெட்காட் அமைப்பின் மாவட்டச் செயலருமான வழக்குரைஞர் ப.கி.தனஞ்செயன் தலைமையில், திருவண்ணாமலை ஸ்ரீஅருணாச்சலா கல்வி அறக்கட்டளை நிர்வாகி தட்சிணாமூர்த்தி, பெட்காட் அமைப்பின் மாநில துணைத் தலைவர் அன்பு, ரீடு தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் இமயவர்மன், செஞ்சிலுவைச் சங்கம் செங்கம் பகுதி நிர்வாகி தாவூத் மற்றும் நிர்வாகிகள் திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம், அருணாசலேஸ்வரர் கோயில், சேஷாத்திரி ஆஸ்ரமம், ரமணாஸ்ரமம், கிரிவலப் பாதை உள்பட நகரின் பல்வேறு இடங்களில் ஏராளமான பொதுமக்களுக்கு துணிப்பைகளை வழங்கி, இனிவரும் காலங்களில் துணிப்பைகளை பயன்படுத்துமாறு அறிவுரை வழங்கினர்.
பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது. நிகழ்ச்சியில், பெட்காட் அமைப்பு, ரீடு தொண்டு நிறுவன நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com