சுடச்சுட

  

  திருவண்ணாமலை மாவட்ட பள்ளி, கல்லூரிகளில் சமத்துவப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
  திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு கல்லூரித் தலைவர் எம்.என்.பழனி தலைமை வகித்தார். செயலரும், தாளாளருமான என்.குமார், பொருளாளர் கோ.ராஜேந்திரகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி நிர்வாகிகள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் சேர்ந்து பொங்கல் வைத்து வழிபட்டனர்.
  நிகழ்ச்சியில், கல்லூரி அறக்கட்டளை உறுப்பினர்கள் என்.எத்திராஜன், எல்.விஜய் ஆனந்த், எ.சாந்தகுமார், கல்விப்புல முதன்மையர் அழ.உடையப்பன், கல்லூரி முதல்வர் கே.ஆனந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
  கரன் கலைக் கல்லூரியில்...: திருவண்ணாமலை கரன் கலை, அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு கல்லூரி துணைத் தலைவர் எ.வ.குமரன் தலைமை வகித்தார். கல்லூரி இயக்குநர் பொன்.முத்து, கல்லூரி ஆலோசகர் மு.ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் ப.துரைசாமி வரவேற்றார்.
  திருவண்ணாமலை அரசு கலை, அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறைப் பேராசிரியர்கள் சு.பிரேம்குமார், கோ.சாந்தமூர்த்தி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு அறிவுரை வழங்கிப் பேசினர்.
  இதைத் தொடர்ந்து, பொங்கல் வைத்து, சூரிய பகவானுக்கு படைக்கப்பட்டது. விழாவில், தமிழ்த் துறைப் பேராசிரியர் க.சசி மற்றும் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
  ஆரணி: ஆரணி ஏ.சி.எஸ். குழுமக் கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினர்.
  எஸ்.பி.சி பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவையொட்டி, கல்லூரி வளாகத்தில் மாணவிகள் வண்ணக் கோலமிட்டு, கரும்பு, மஞ்சள் வைத்தும், பானையில் பொங்கல் வைத்தும் கொண்டாடினர். விழாவுக்கு கல்லூரிச் செயலர் ஏ.சி.ரவி தலைமை வகித்தார். கல்லூரி  முதல்வர் திருநாவுக்கரசு மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.
  ஆரணி டாக்டர் எம்ஜிஆர் சொக்கலிங்கம் கலைக் கல்லூரியில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் மாணவிகள் பொங்கல் வைத்து கொண்டாடினர். இதில், கல்லூரிச் செயலர் ஏ.சி.ரவி, கல்லூரி முதல்வர் சுகுமாரன் மற்றும் பேராசிரியர்கள்  கலந்து கொண்டனர்.
  ஆரணி டாக்டர் எம்ஜிஆர் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் கல்லூரிச் செயலர் ஏ.சி.ரவி, கல்லூரி இயக்குநர் டி.ஆறுமுகமுதலி, முதல்வர் பி.ஸ்டாலின் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
  செங்கம்: செங்கத்தை அடுத்த குருமப்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.
  இதையொட்டி, மாணவர்கள் புதிய பானையில் பொங்கல் வைத்தும், கரும்பு, மஞ்சள் உள்ளிட்டவற்றை படையல் வைத்தும் கொண்டாடினர். பின்னர், மாணவர்களுக்கு பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, அவற்றில் வென்ற மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் சிவராமன் பரிசுகளை வழங்கினார்.
  விழாவில் ஆசிரியர் சுடலைப்பாண்டி மற்றும் பெற்றோர் - ஆசிரியர் கழகத் தலைவர், கிராம மக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
  இதேபோல, செய்யாறு ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேநிலைப் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai