சுடச்சுட

    

    போளூர் சிறப்புநிலை பேரூராட்சி சார்பில், புகையில்லா போகிப் பண்டிகை கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    ஊர்வலத்தில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் கலந்துகொண்டு திருவண்ணாமலை - வேலூர் சாலை, அண்ணா சாலை, போளூர் - ஜமுனாமரத்தூர் சாலை, பழைய பஜார், சிந்தாதரிப்பேட்டை தெரு உள்பட நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாகச் சென்றனர்.
    இதில், பேரூராட்சி செயல் அலுவலர் ஜெசிமாபானு, காவல் ஆய்வாளர் சுரேஷ்பாபு, பள்ளித் தலைமை ஆசிரியை தாமரைச்செல்வி, தலைமை எழுத்தர் எழிலரசி, துப்புரவு ஆய்வாளர் சோமு மற்றும் பேரூராட்சி ஊழியர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai