சுடச்சுட

  

  வந்தவாசி அருகே பைக் மீது டிராக்டர் மோதியதில் விவசாயி உயிரிழந்தார்.
  வந்தவாசியை அடுத்த தெய்யாறு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தாமரை (65). இவர், வியாழக்கிழமை மாலை பைக்கில் தெய்யாறிலிருந்து வந்தவாசிக்கு சென்று கொண்டிருந்தார். வந்தவாசி - தெய்யாறு சாலையில் அத்திப்பாக்கம் கிராமம் அருகே சென்றபோது, செந்தாமரையின் பைக் மீது பின்னால் கரும்பு ஏற்றி வந்த டிராக்டர் மோதியது.
  இதில், பலத்த காயமடைந்த செந்தாமரை சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், வந்தவாசி வடக்கு போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai