சுடச்சுட

  

  ரேஷன் கடைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க அறிவுறுத்தல்

  By DIN  |   Published on : 12th January 2019 10:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் மாற்றுத் திறனாளிகளை வரிசையில் நிற்க வைக்காமல் முன்னுரிமை அளித்து, பொருள்களை வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி உத்தரவிட்டார்.
  மாவட்டம் முழுவதும் 1,633 நியாயவிலைக் கடைகள் மூலம் பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நியாயவிலைக் கடைகளில் தங்களை வரிசையில் நிற்க வைப்பதால் பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாகவும், நியாய
  விலைக் கடைகளில் தங்களுக்கு முன்னுரிமை அளித்து பொருள்களை வழங்க வேண்டும் என்றும் மாற்றுத் திறனாளிகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர். இந்தக் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், வெள்ளிக்கிழமை (ஜனவரி 11) முதல் மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளித்து பொருள்களை வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் 
  கே.எஸ்.கந்தசாமி உத்தரவிட்டார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai