சுடச்சுட

  


  வந்தவாசியை அடுத்த வழூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சமத்துவப் பொங்கல் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
  வந்தவாசி வட்டாரத்துக்கு உள்பட்ட வழூர், இரும்பேடு, கொவளை, ஓசூர், உளுந்தை உள்ளிட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் சார்பில் இந்த விழா நடைபெற்றது.
  விழாவுக்கு வந்தவாசி வட்டார மருத்துவ அலுவலர் திருமூர்த்தி தலைமை வகித்தார். இதையொட்டி, வண்ணக் கோலமிட்டு புதுப்பானையில் பொங்கலிட்டனர். மேலும், ஒருவருக்கொருவர் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். மேலும், இறகுபந்து, கைப்பந்து, சாக்குபை ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.
  விழாவில் மருத்துவர்கள் ரேவதிதேவி, சங்கீதபிரியா, பாஸில், செலஸ்டி, மணிமாறன், ஆனந்தன், கோகுல், தரணீஸ்வரன், சந்தோஷ், ராஜ்ஆனந்த் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai