சுடச்சுட

  


  திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி அருகே உள்ள மாவட்ட கட்டட மையத்தில் தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் சங்க ஒன்றிய செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
  கூட்டத்துக்கு ஒன்றியத் தலைவர் ரா.நாராயணன் தலைமை வகித்தார். கெளரவத் தலைவர் எஸ்.பழனி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜெ.மனோகரன், முன்னாள் ஒன்றியச் செயலர் பி.லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகிக்க, ஒன்றியச் செயலர் ரா.முருகன் வரவேற்றார்.
  தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்துப் பணியாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் கே.குமார் சிறப்புரையாற்றினார். இதில், மண்டலத் தலைவர் வி.சுரேஷ், மாவட்டத் தலைவர் எம்.சுகுமார், மாவட்டச் செயலர் ஆர்.சீத்தாராமன், மாவட்டப் பொருளாளர் ஏழுமலை, துணைத் தலைவர் எம்.ஆர்.பச்சையப்பன், இணைச் செயலர் அண்ணாச்சி, துணைச் செயலர்கள் ஏ.முருகன், ஏ.ராமச்சந்திரன், மகளிரணி மாவட்டத் தலைவி பி.எஸ்.உண்ணாமலை, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எம்.ரவிச்சந்திரன், டி.செல்வராஜ், எம்.சேட்டு, ஆர்.திருமலை, ராமமூர்த்தி, எம்.ரகு, ஏ.ஆர்.சண்முகம், ஒன்றிய துணைச் செயலர் எம்.உமாமகேஸ்வரி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
  கூட்டத்தில், ஊராட்சிச் செயலர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கிய தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில், மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், ஊராட்சிச் செயலர்கள் திரளாக கலந்து கொண்டனர். ஒன்றியப் பொருளாளர் எம்.தனபால் நன்றி கூறினார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai