சுடச்சுட

  


  செங்கத்தில் சுவாமி விவேகானந்தர் ரத ஊர்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.
  செங்கம் சுவாமி விவேகானந்தர் சேவா சங்கம், ராமகிருஷ்ணா அறக்கட்டளை சார்பில், தேசிய இளைஞர் தின விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சுவாமி விவேகானந்தரின் ரதம் அலங்கரிக்கப்பட்டு, செங்கம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலம் தொடங்கியது.
  நிகழ்ச்சியில் மாவட்ட உரிமையியல் நீதிபதி வி.ராதிகா குத்துவிளக்கு ஏற்றினார். ஆசிய விளையாட்டு வீராங்கனை சாந்திசௌந்தரராஜன் ஊர்வலத்தை கொடியசைத்து தொடக்கிவைத்தார்.
  புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம், பழைய பேருந்து நிலையம், போளூர் சாலை வழியாக ராமகிருஷ்ணா பள்ளியை சென்றடைந்தது. பின்னர், அங்கு சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவுகள் குறித்த ஆன்மிகக் கூட்டம் நடைபெற்றது.
  இதில், செங்கம் ராமகிருஷ்ணா அறக்கட்டளைத் தலைவர் எஸ்.பாண்டுரங்கன், செயலர் ராமமூர்த்தி, வழக்குரைஞர் கஜேந்திரன், கணேசர் குழும உரிமையாளர் ரவீந்தரன், சக்தி பாலிடெக்னிக் கல்லூரித் தலைவர் எஸ்.வெங்கடாசலபதி, சேவா சங்க நிர்வாகிகள் ராமஜெயம், சினுவாசன், சீனு, தொழிலதிபர்கள் வெங்கடேஷ்வரா பாபு, சம்பத் 
  மற்றும் ராமகிருஷ்ணா பள்ளி மாணவர்கள், சக்தி பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai