சுடச்சுட

  


  திருவண்ணாமலை ஆர்.எஸ். நகரில் உள்ள ஆர்.எஸ். பன்னாட்டுப் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
  விழாவுக்கு பள்ளித் தாளாளர் ஆர்.எஸ்.செல்வம் தலைமை வகித்தார். பள்ளிச் செயலர் சந்திராசெல்வம் மற்றும் பள்ளியின் துணைத் தலைவர் ஆர்.எஸ்.ரம்யா, திலிப்குமார், உணவக உரிமையாளர் முத்துகுமார் ஆகியோர் முன்னிலை வகிக்க, பள்ளி முதல்வர் தீபாதேவி வரவேற்றார்.
  பள்ளித் தாளாளர் ஆர்.எஸ்.செல்வம் பொங்கல் கொண்டாடுவதன் முக்கியத்துவம் குறித்துப் பேசினார். பின்னர், பள்ளி மாணவர்களின் நடன நிகழ்ச்சி மற்றும் மாணவர்களுக்கு உறியடித்தல், சைக்கிள் போட்டி, பூ கட்டுதல், பறையிசை, தண்ணீர் குடம் எடுத்தல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு, அவற்றில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
  நிகழ்ச்சியில் மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பள்ளி நிர்வாக அலுவலர் ரம்யா 
  செய்திருந்தார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai