பட்டுச் சேலை கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு போனஸ்

ஆரணியை அடுத்த அத்திமலைப்பட்டு பட்டுச் சேலை கூட்டுறவு சங்கத்தில் உள்ள 305 உறுப்பினர்களுக்கு 4 லட்சத்து 37ஆயிரத்து 344 ரூபாய்க்கான போனஸ், டிவிடென்ட் தொகையை இந்து சயம அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் 

ஆரணியை அடுத்த அத்திமலைப்பட்டு பட்டுச் சேலை கூட்டுறவு சங்கத்தில் உள்ள 305 உறுப்பினர்களுக்கு 4 லட்சத்து 37ஆயிரத்து 344 ரூபாய்க்கான போனஸ், டிவிடென்ட் தொகையை இந்து சயம அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் 
எஸ்.ராமச்சந்திரன் ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.
ஆரணியை அடுத்த அத்திமலைப்பட்டு கிராமத்தில் அறிஞர் அண்ணா பருத்தி - பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி, விற்பனைச் சங்கம் இயங்கி வருகிறது. இங்குள்ள உறுப்பினர்களுக்கு போனஸ், டிவிடென்ட் தொகை வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழக இந்து சயம அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பங்கேற்று, சங்க உறுப்பினர்களுக்கு போனஸ் தொகைக்கான காசோலைகளை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது: 
அத்திமலைப்பட்டு பட்டு -கைத்தறி கூட்டுறவு சங்கம் லாபகரமாக இயங்கி வருகிறது. இந்தச் சங்கத்தில் சுமார் 1,069 உறுப்பினர்கள் உள்ளனர். சங்கத்தின் லாபத் தொகையை உறுப்பினர்கள் 305 பேருக்கு பிரித்துத் தரப்பட்டது. அதன் படி, 3 லட்சத்து 87 ஆயிரத்து 449 ரூபாயை போனஸாகவும், 49ஆயிரத்து 895 ரூபாய் டிவிடென்ட் தொகையாகவும் வழங்கப்பட்டது.
கடந்த 2016-17 ஆம் ஆண்டில் 
7 லட்சத்து 86 ஆயிரம் ரூபாய் லாபத்திலும், 2017-18 ஆம் 7 லட்சத்து 81 ஆயிரம் ரூபாய் லாபத்திலும் இயங்கியது.
சிறப்பாக இயங்கும் சங்கம் என்பதால், 245 நெசவாளர்களுக்கு முத்ரா திட்டத்தின் கீழ், ஒரு கோடியே 22 லட்ச ரூபாய் அளவுக்கு கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. முதியோர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், 18 நெசவாளர்களுக்கு மாதந்தோறும் ரூ. ஆயிரம் பெற்றுத் தரப்படுகிறது. 
குடும்ப ஓய்வுதியத் திட்டத்தின் கீழ், 8 பயனாளிகளுக்கு ரூ. ஆயிரம் பெற்றுத் தரப்படுகிறது.  425 நெசவாளர்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. நெசவாளர்களுக்கு பசுமை வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், 2.60 லட்சத்தில்  50 வீடுகள் ஒரு கோடியே 30 லட்சம் மதிப்பில் கட்டித்தரப்பட்டுள்ளன என்றார் அவர்.
விழாவுக்கு கூட்டுறவு சங்கத் தலைவர் சங்கரிபாலச்சந்தர் தலைமை வகித்தார். கூட்டுறவு சங்க மேலாண் இயக்குநர் எஸ்.தேவிபத்மஜா வரவேற்றார். அரசு வழக்குரைஞர் க.சங்கர், வேலூர் பால் கூட்டுறவு சங்கத் துணைத் தலைவர் பாரி பி.பாபு, ஒன்றியச் செயலர்கள் எம்.வேலு, பிஆர்ஜி.சேகர், எம்.வேலு, முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் அ.கோவிந்தராஜ், அன்னை அஞ்சுகம் பட்டுக் கூட்டுறவு சங்கத் தலைவர் ஜோதிலிங்கம், சங்கத் துணைத் தலைவர் பஞ்சாட்சரம், இயக்குநர்கள் கே.பெருமாள், வி.தண்டபாணி, டி.சேகர், டி.முனியன், பி.மலர், சங்க மேலாளர் ஆர்.கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில், காலமான நெசவாளர்கள் இரண்டு பேரின் குடும்பத்தினருக்கு காப்பீட்டுத் தொகையாக தலா ரூ. 2 லட்சத்துக்கான காசோலைகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com