காணும் பொங்கல்: சேராம்பட்டுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

செய்யாறை அடுத்த சேராம்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீரேணுகாம்பாள் (எ) எல்லையம்மன் கோயிலில்

செய்யாறை அடுத்த சேராம்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீரேணுகாம்பாள் (எ) எல்லையம்மன் கோயிலில் காணும் பொங்கல் விழா வியாழக்கிழமை (ஜனவரி 17) நடைபெறுகிறது.
தொடர்ந்து 56 -ஆம் ஆண்டாக நடைபெறும் இந்த விழாவையொட்டி, வியாழக்கிழமை காலையில் எல்லையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, அலங்காரமும், இரவு சிறப்பு மலர், மின் அலங்காரத்துடன் அம்மன் வீதியுலாவும் நடைபெறுகின்றன.
வெள்ளிக்கிழமை (ஜனவரி 18)  மாலை செய்யாறு ஆற்றங்கரையில் எல்லையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெறுகின்றன. நிகழ்ச்சியில் தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், செய்யாறு தொகுதி எம்எல்ஏ தூசி கே.மோகன், ஆரணி தொகுதி எம்.பி. செஞ்சி வெ.ஏழுமலை உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.
சிறப்புப் பேருந்துகள் இயக்கம்: காணும் பொங்கல் திருவிழாவுக்காக செய்யாறு, ஆரணி, கலவை, ஆற்காடு ஆகிய அரசுப் போக்குவரத்துப் பணிமனைகளில் இருந்து சிறப்புப் பேருந்துகள் காலை முதல் இரவு வரை இயக்கப்படவுள்ளன. ஏற்பாடுகளை இந்து சமய 
அறநிலையத் துறை செயல் அலுவலர் பா.நந்தகுமார், ஆய்வர் 
அ.மேகலா மற்றும் கிராம மக்கள் செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com