திருவள்ளுவர் தின விழா கொண்டாட்டம்

ஆரணி, செங்கம் பகுதிகளில் திருவள்ளுவர் தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

ஆரணி, செங்கம் பகுதிகளில் திருவள்ளுவர் தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
ஆரணியை அடுத்த குண்ணத்தூரில் திருவள்ளுவர் சிலைக்கு தமிழ் மன்றம் சார்பில் புதன்கிழமை மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், தமிழ் மன்றத்தின் தலைவர் அரங்கவிநாயகம், பொருளாளர்  கு.ப.நாகரத்தினம், உறுப்பினர்கள் சுவாமிசந்தர், சுப்பிரமணி, வாசுதேவன், மணிகண்டன், குமணன், மாமது, அரிதாஸ், விஜி, பழனி, ஸ்ரீதர், சுகுமார், ஹரி, குமார், முருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
செங்கம்: செங்கம் வட்ட தமிழ்ச் சங்கம் சார்பில், பழைய பேருந்து நிலையத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு செங்கம் மகரிஷி கல்விக் குழுமத் தலைவர் மனோகரன் மாலை அணிவித்தார்.
இதைத் தொடர்ந்து, சிலை அருகில் தமிழ்ச் சங்கம் சார்பில், மார்கழி மாதப் பிறப்பு அன்று செங்கம் ராமகிருஷ்ணா பள்ளியில் நடைபெற்ற திருப்பாவை, திருவெம்பாவை ஒப்பித்தல் போட்டியில் கலந்துகொண்ட தனியார், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பரிசு, சான்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு செங்கம் ராமகிருஷ்ணா அறக்கட்டளைத் தலைவர் பாண்டுரங்கன் தலைமை வகித்தார். கணேசர் குழும உரிமையாளர் ரவீந்தரன், செங்கம் வட்ட தமிழ்ச் சங்கத் தலைவர் தனஞ்செயன், செயலர் அசோக்குமார், துணைத் தலைவர் ஆசைமுஷீர்அகமத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நல்லாசிரியர் அன்பழகன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக செங்கம் டிஎஸ்பி குத்தாலிங்கம் கலந்துகொண்டு, திருப்பாவை, திருவெம்பாவை ஒப்பித்தல் போட்டியில் கலந்துகொண்ட மாணவர்களைப் பாராட்டி, சான்று, பரிசுகளை வழங்கிப் பேசினார்.
இதைத் தொடர்ந்து, திருக்குறளில் உள்ள ஒழுக்கமுடமை என்ற அதிகாரத்தில் ஓய்வு பெற்ற மாவட்டக் கல்வி அதிகாரி மதியழன், கொல்லாமை என்ற அதிகாரத்தில் மகாபாரத சொற்பொழிவாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பேசினர்.
நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற வட்டாரக் கல்வி அதிகாரி மாணிக்கம், முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் பார்த்தசாரதி, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கோவிந்தராஜன், அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர் பழநி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com