காமாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
By DIN | Published On : 24th January 2019 09:47 AM | Last Updated : 24th January 2019 09:47 AM | அ+அ அ- |

திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் கிராமத்தில் உள்ள ஸ்ரீகாமாட்சியம்மன் கோயிலின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.
30 ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கோயில் கட்டப்பட்டது.
10 ஆண்டுகளுக்கு ஒரு கோயிலின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, புதன்கிழமை அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலை 5 மணி முதல் மங்கள வாத்தியங்கள் முழங்க லட்சுமி ஹோமம், கணபதி ஹோமம், வாஸ்து ஹோமம், கோ பூஜை, அம்மனுக்கு கண் திறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. காலை 10 மணிக்கு கோயில் கோபுர கலசங்கள் மீது சிவாச்சாரியர்கள் புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேக விழாவை நடத்தினர். விழாவில், மங்கலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.