Enable Javscript for better performance
8,000 அரசு ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு இன்று நோட்டீஸ்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    8,000 அரசு ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு இன்று நோட்டீஸ்

    By DIN  |   Published On : 28th January 2019 10:05 AM  |   Last Updated : 28th January 2019 10:05 AM  |  அ+அ அ-  |  

    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சுமார் 8 ஆயிரம் அரசு ஊழியர்கள் மீது 17-பி பிரிவின் கீழ் நடவடிக்கை எடுப்பதற்கான விளக்கம் கேட்கும் நோட்டீஸ் திங்கள்கிழமை (ஜனவரி 28) பதிவுத் தபாலில் அனுப்பப்படுகிறது.
     இதேபோல, அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்களுக்குப் பதிலாக, 1,600 தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதற்கான பணி நியமன ஆணைகளையும் மாவட்டக் கல்வித் துறை தயார் நிலையில் வைத்துள்ளது.
     தமிழகம் முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பைச் சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்களில் 8 ஆசிரியர்கள், வருவாய்த் துறையைச் சேர்ந்த வட்டாட்சியர் ஒருவர் என 9 பேர் மீது போலீஸார் ஜாமீனில் வெளிவர முடியாத 2 பிரிவுகள் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இதையடுத்து, 9 பேரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
     பணிக்கு திரும்ப அறிவுறுத்தல்: இந்த நிலையில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
     ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பின் தொடர் போராட்டம் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இன்றி கற்பித்தல் பணி பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது.
     இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொது நல வழக்கில் வழங்கப்பட்ட இடைக்கால ஆணையில், வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் ஜனவரி 25-ஆம் தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
     எனவே, காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து வகை ஆசிரியர்களும் ஜனவரி 28-ஆம் தேதிக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும். அவ்வாறு பணியில் சேரும் ஆசிரியர்கள் மீது எவ்வித துறைவாரியான நடவடிக்கையும் எடுக்கப்படாமல், அவர்கள் பணிபுரிந்து வந்த பள்ளிகளிலேயே பணியேற்கலாம்.
     காலிப் பணியிடங்களாகக் கருதப்படும்: ஜனவரி
     28-ஆம் தேதி முடிவில் பணியில் சேராத ஆசிரியர்களின் பணியிடங்கள் காலிப் பணியிடங்களாக கருத்தப்பட்டு, உத்தேச காலிப் பணியிடப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, இந்தப் பட்டியலின் அடிப்படையில் தகுதிவாய்ந்த தற்காலிக ஆசிரியர்கள் ரூ.10 ஆயிரம் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
     ஜனவரி 28-ஆம் தேதிக்குப் பிறகு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், முதுநிலை, பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள், இதர ஆசிரியர்கள், தொடக்க, நடுநிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள், இதர ஆசிரியர்கள் பணியில் சேர வந்தால் நியமன அலுவலரால் வருவாய், கல்வி மாவட்ட அளவிலான ஆசிரியர் காலிப் பணியிடங்களில் ஏதேனும் ஒரு காலிப்பணியிடத்தில் துறை நடவடிக்கைக்கு உள்பட்டு பணியேற்க ஆணை வழங்கப்படும்.
     எனவே, மாணவர்கள் நலன் கருதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து ஆசிரியர்களும் திங்கள்கிழமை (ஜனவரி 28) தவறாது பணியில் சேர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
     நோட்டீஸ்: தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் திருவண்ணாமலை மாவட்ட வருவாய்த் துறையினர் 420 பேர், கல்வித் துறையினர் 6,800 பேர், ஊரக வளர்ச்சித் துறையினர் 400 பேர், நெடுஞ்சாலைத் துறையினர் 20 பேர் உள்பட அரசு துறைகளில் பணிபுரியும் கடைநிலை ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரையிலான சுமார் 8,000 பேர் மீது 17-பி பிரிவின் கீழ் நடவடிக்கை எடுப்பதற்கான விளக்கம் கேட்டு நோட்டீஸ் தயாரிக்கப்பட்டுள்ளது.
     இந்த நோட்டீûஸ சம்பந்தப்பட்டவர்களிடம் அளிக்கும் பணியும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஆதரவாக கிராம நிர்வாக அலுவலர்கள் செயல்பட்டு நோட்டீûஸ விநியோகிக்க மறுப்பதால், திங்கள்கிழமை (ஜனவரி 28) 8,000 பேருக்கும் தனித்தனியே பதிவுத் தபாலில் நோட்டீஸ் அனுப்பும் பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
     1,600 பணி நியமன ஆணைகள் தயார்
     ரூ.10 ஆயிரம் தொகுப்பூதியத்தில் பணிபுரிய மாவட்டம் முழுவதும் சுமார் 2,700 விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன. இதில் தகுதி, முன்னுரிமை அடிப்படையில் முதல்கட்டமாக 1,600 பேர் தேர்வு செய்யப்பட்டு, எந்தெந்தப் பள்ளிகளில் இவர்களை நியமிப்பது என்பதை இறுதி செய்து பணி நியமன ஆணைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. திங்கள்கிழமை (ஜனவரி 28) மாலைக்குள் ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பாவிட்டால் செவ்வாய்க்கிழமை காலை பணி நியமன ஆணைகளுடன் தற்காலிக ஆசிரியர்கள் பணியில் சேருவர் என்று மாவட்ட
     கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
     
     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp