சுடச்சுட

  

  தாக்கப்பட்ட மூதாட்டி சாவு: அடிதடி வழக்கு கொலை வழக்காக மாற்றம்

  By DIN  |   Published on : 02nd July 2019 09:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வேட்டவலம் அருகே தாக்குதலுக்குள்ளான மூதாட்டி இறந்ததை அடுத்து, அடிதடி வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.
   வேட்டவலம், செக்குமேடு தெருவைச் சேர்ந்தவர் கட்டட மேற்பார்வையாளர் வேலு. இவரது 17 வயது மகளும் அதே பகுதியைச் சேர்ந்த பெயிண்டர் வேலை செய்யும் ராஜசேகரும் சில தினங்களுக்கு முன்பு ரகசியத் திருமணம் செய்து கொண்டனர்.
   தகவலறிந்த பெண் வீட்டார் புதுமணத் தம்பதியை சமாதானம் செய்து, பெண்ணைப் பிரித்து அழைத்துச் சென்றனர்.
   இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு ராஜா தனது ரகசியத் திருமண புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டாராம். இதையறிந்த மணப்பெண்ணின் தந்தை வேலு, உறவினர் சிவா ஆகியோர் ராஜா வீட்டுக்குச் சென்று ராஜாவின் தாய் லட்சுமியிடம் நியாயம் கேட்டனராம். அப்போது, ஆத்திரமடைந்த வேலு, சிவா ஆகியோர் சேர்ந்து லட்சுமியைத் தாக்கியதுடன் வீட்டையும் சூறையாடினராம்.
   இதில் பலத்த காயமடைந்த லட்சுமி, தீவிர சிகிச்சைக்காக வேலூர் அடுக்கும்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
   அங்கு லட்சுமி (55) திங்கள்கிழமை இறந்தார். இதையடுத்து, அடிதடி வழக்கை கொலை வழக்காக வேட்டவலம் போலீஸார் மாற்றும் செய்து விசாரித்து வருகின்றனர்.
   இந்த வழக்கில் ஏற்கெனவே பெண்ணின் தந்தை வேலு, அவரது உறவினர் சிவா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai