மக்கள் குறைதீர் கூட்டத்தில் 1,092 மனுக்கள்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து 1,092 மனுக்கள் வரப்பெற்றன.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து 1,092 மனுக்கள் வரப்பெற்றன.
 கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, பொதுமக்கள் மற்றும் முதியோர்கள், மாற்றுத் திறனாளிகளிடம் இருந்து கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, ஜாதிச் சான்று, வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 1,092 மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.
 இந்த மனுக்கள் மீதும், ஏற்கெனவே பெறப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்கள் மீதும் விரைவாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
 நலத் திட்ட உதவிகள்: குறைதீர் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் தசைச் சிதைவு நோய் மற்றும் பக்கவாதத்தால் முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டு 2 கால்கள், 2 கைகளை இழந்த 15 பேருக்கு பேட்டரியால் இயங்கும் ரூ.11 லட்சத்து 17 ஆயிரத்து 500 மதிப்பிலான சிறப்பு சக்கர நாற்காலிகளையும், கலசப்பாக்கம் வட்டம், பூண்டி கிராமத்தைச் சேர்ந்த வள்ளி என்பவருக்கு முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவர் இறப்பு நிவாரணம் மற்றும் ஈமச்சடங்கு நிவாரணத் தொகை ரூ.22 ஆயிரத்து 500 பெறுவதற்காக ஆணை ஆகியவற்றை ஆட்சியர் வழங்கினார்.
 கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பொ.ரத்தினசாமி, ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் பா.ஜெயசுதா, சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் இரா.வில்சன் ராஜசேகர், மகளிர் திட்ட இயக்குநர் சந்திரா, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பரிமளா, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சு.சரவணன், மாவட்ட சமூக நல அலுவலர் கிறிஸ்டினா தா.டார்த்தி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) எஸ்.ஜானகி மற்றும் அனைத்துத் துறை அதிகாரிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com