மின் கசிவால் கூரை வீடு எரிந்து சேதம்
By DIN | Published On : 05th July 2019 08:48 AM | Last Updated : 05th July 2019 08:48 AM | அ+அ அ- |

போளூர் அருகே மின்கசிவு காரணமாக கூரை வீடு எரிந்து சேதமடைந்தது.
போளூரை அடுத்த சந்தவாசல் ஊராட்சிக்கு உள்பட்ட துளுவபுஷ்பகிரி கிராமத்தில் வசித்து வருபவர் ஜானகிராமன் மகன் தஞ்சியப்பன்.
இவரது கூரை வீடு புதன்கிழமை இரவு திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனால், வீட்டில் இருந்த வீட்டு உபயோகப் பொருள்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் எரிந்து சாம்பலாகி விட்டதாகக் கூறப்படுகிறது. மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்காலம் எனத் தெரிகிறது. இதுகுறித்து சந்தவாசல் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.