சுடச்சுட

  

  திருவண்ணாமலை சிஷ்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில மொழியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
   நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளர் சி.வேலுச்சாமி தலைமை வகித்தார். பள்ளிச் செயலர் வி.எம்.நேரு, பொருளாளர் மணி, துணைத் தலைவர் எஸ்.கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி இணைச் செயலர் ரவிச்சந்திரன் வரவேற்றார்.
   பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆங்கில மொழியின் சிறப்புகள் குறித்து விளக்கப்பட்டது. மேலும், ஆங்கில மொழி விழிப்புணர்வுப் பேரணியில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், பள்ளி முதல்வர் என்.மகாதேவன், பள்ளியின்
   ஆங்கில வழிக் கல்வி மேலாளர் தமிழ்ச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai