சுடச்சுட

  

  தேர்தல் பணியின் போது இறந்த 2 அலுவலர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.15 லட்சம் நிதியுதவி: மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

  By DIN  |   Published on : 11th July 2019 09:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவண்ணாமலை மாவட்டத்தில் மக்களவைத் தேர்தல் பணியின்போது இறந்த 2 அரசு அலுவலர்களின் குடும்பங்களுக்கு தேர்தல் ஆணையம் சார்பில் வழங்கப்படும் தலா ரூ.15 லட்சம் நிதியுதவியைப் பெறுவதற்கான ஆணையை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி வழங்கினார்.
   மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த திருவண்ணாமலை மாவட்ட அரசு அலுவலர்கள் 3 பேர் இறந்தனர். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும் தலா ரூ.15 லட்சம் நிதியை வழங்கலாம் என்று மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கே.எஸ்.கந்தசாமி, தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை செய்திருந்தார்.
   பரிந்துரையை ஏற்ற தேர்தல் ஆணையம், முதல்கட்டமாக மக்களவைத் தேர்தல் பணியின்போது இறந்த துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராமபிரான், ஜமுனாமரத்தூர் வட்ட தனி வட்டாட்சியர் குப்புசாமி ஆகியோருக்கு தலா ரூ.15 லட்சங்கள் நிதி வழங்க உத்தரவிட்டது.
   இந்த உத்தரவு ஆணை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், இறந்த 2 அரசு அலுவலர்களின் குடும்பத்தினரிடமும் தலா ரூ.15 லட்சங்கள் பெறுவதற்கான ஆணையை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி வழங்கினார்.
   அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் பொ.ரத்தினசாமி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் எஸ்.ஜானகி, தேர்தல் பிரிவு தனி வட்டாட்சியர் முருகன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai