சுடச்சுட

  

  ராணிப்பேட்டை அருகே பெற்றோர்களால் கைவிடப்பட்டு கடந்த 15 நாள்களாக தவித்து வந்த இருளர் இன சிறுவர்கள் 4 பேர் மீட்கப்பட்டு, மாவட்ட அரசு குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டனர்.
   ராணிப்பேட்டையை அடுத்த தெங்கால் கிராமத்தில் இருளர் இனத்தைச் சேர்ந்த 4 சிறுவர்கள் பெற்றோர்கள் துணையின்றி கடந்த 15 நாள்களாக கிராம மக்களிடம் உணவு வாங்கி உண்டு, கோயில் வளாகத்தில் தூங்கி சுற்றித்திரிந்து வந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த தெங்கால் கிராம முன்னாள் ஊராட்சித் தலைவர் டி.சி.பத்பநாபன் உடனடியாக காவல் துறைக்கும், வருவாய்த் துறையினருக்கும், மாவட்ட சைல்ட் லைன் உதவி மையம் 1098-க்கும் புதன்கிழமை தகவல் அளித்தார்.
   அதன்பேரில், சிப்காட் போலீஸார், வருவாய்த் துறையினர் மற்றும் மாவட்ட சைல்ட் லைன் உதவி மையக் குழு உறுப்பினர் மகாலட்சுமி ஆகியோர் தெங்கால் கிராமத்துக்கு வந்து, இருளர் இன சிறுவர்களை மீட்டு விசாரணை நடத்தினர்.
   அதில், அதே கிராமத்தில் வசித்துவந்த இருளர் இன சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு தம்பதி தாங்கள் பெற்ற 4 குழந்தைகளை தவிக்க விட்டுச் சென்றது தெரியவந்தது.
   இதையடுத்து, மாவட்ட சைல்ட் லைன் உதவி மையக் குழுவினர், மீட்கப்பட்ட 4 சிறுவர்களையும் அழைத்துச் சென்று மாவட்ட அரசு குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்தனர்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai