சுடச்சுட

  

  போளூரை அடுத்த எடப்பிறை, திண்டிவனம், மாம்பட்டு ஆகிய ஊராட்சிகளில் மத்தியக் குழுவினர் புதன்கிழமை ஆய்வு செய்தனர்.
   போளூரை அடுத்த எடப்பிறை, திண்டிவனம், மாம்பட்டு ஆகிய ஊராட்சிகளில் நீர் பாதுகாப்பு மற்றும் குடிநீர் பணிகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகள் குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையைச் சேர்ந்த சுரபிராய், நீர் ஆய்வு வல்லுநர் ஜிஜேந்திரசிம்மி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
   எடப்பிறை கிராமத்தில் தடுப்பணை பணிகள், மாம்பட்டு கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளிக் கிணறு, திண்டிவனம் கிராமத்தில் சுமார் 500 மா மரக்கன்றுகளுடன் கூடிய தோப்பு அமைக்கப்பட்டு, மாமரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருவதையும் மத்தியக் குழுவினர் ஆய்வு செய்தனர்.
   உதவிச் செயற்பொறியாளர் ஜெகன்ஆரா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கா.ஆனந்தன், என்.சக்திவேல், உதவிப் பொறியாளர் குமார், ஊராட்சிச் செயலர்கள் ஆனந்தன், ஜெயக்குமார் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
   
   
   
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai