சுடச்சுட

  

  மாநில கடிதம் எழுதும் போட்டி: திருவண்ணாமலை மாணவிகள் இருவர் சிறப்பிடம்

  By DIN  |   Published on : 11th July 2019 09:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அஞ்சல் துறை சார்பில் நடத்தப்பட்ட மாநில அளவிலான கடிதம் எழுதும் போட்டியில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 2 மாணவிகள் சிறப்பிடம் பெற்றனர்.
   அஞ்சல் துறை சார்பில், அகில இந்திய அளவிலான கடிதம் எழுதும் போட்டி நடத்தப்பட்டது. என் தாய் நாட்டுக்கு ஒரு கடிதம் என்ற தலைப்பில் 4 பிரிவுகளின்கீழ், 2018 ஜூன் 15 முதல் அக்டோபர் 31-ஆம் தேதி வரை இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டன.
   இவற்றில் திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 5 ஆயிரத்து 31 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். போட்டியில் மாநில அளவில் வெற்றி பெற்றவர்களின் விவரம் சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டன.
   இதில், 18 வயதுக்கு உள்பட்டோருக்கான பிரிவில் திருவண்ணாமலை தனியார் பள்ளியின் 8-ஆம் வகுப்பு மாணவி வினிஷா மாநில அளவில் இரண்டாமிடமும், போளூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி 12-ஆம் வகுப்பு மாணவி ஷாஹின் மாநில அளவில் மூன்றாமிடமும் பிடித்தனர்.
   பரிசுகள் அளிப்பு: மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த மாணவி வினிஷாவுக்கு ரூ.10 ஆயிரம், மூன்றாமிடம் பிடித்த மாணவி ஷாஹினுக்கு ரூ.5 ஆயிரம் மதிப்பிலான காசோலைகள், சான்றிதழ்கள், இலவச அஞ்சல் சேமிப்புக் கணக்குகள், தலா ரூ.2 ஆயிரத்து 500 மதிப்பிலான தபால் தலைகளை அஞ்சல் துறையின் சென்னை தலைமை ஆணையர் அஜித்குமார், தமிழ்நாடு அஞ்சல் துறை தலைவர் என்.சம்பத் ஆகியோர் வழங்கினர்.
   இவ்விரு மாணவிகளுக்கும் திருவண்ணாமலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சந்திரசேகரன் புதன்கிழமை பரிசு வழங்கிப் பாராட்டினார்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai