மனுநீதி நாள் முகாமில் நலத் திட்ட உதவிகள் அளிப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
 திருவண்ணாமலை வட்டம், வடகருங்காலிப்பாடி கிராமத்தில் நடைபெற்ற முகாமுக்கு, திருவண்ணாமலை வட்டாட்சியர்
 கே.அமுல் தலைமை வகித்தார். வட்ட வழங்கல் அலுவலர் சுமதி முன்னிலை வகித்தார். துரிஞ்சாபுரம் மண்டல துணை வட்டாட்சியர் இந்திரா வரவேற்றார்.
 மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் க.வ.பரிமளா சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களைப் பெற்றார்.
 மேலும், இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, சிறு - குறு விவசாயிச் சான்று, வாரிசுச் சான்று, விவசாயிகளுக்கு வேளாண் உபகரணங்கள் என ரூ.5 லட்சத்திலான பல்வேறு நலத் திட்ட உதவிகளை க.வ.பரிமளா வழங்கினார்.
 முகாமில், வருவாய் ஆய்வாளர் ராஜலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர்கள் பரணிதரன், வெங்கடேசன், உத்திரகுமார், ஜீவிதா, ஆர்.கதிரவன், வே.பலராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 ஆரணி: சேத்துப்பட்டை அடுத்த நம்பேடு கிராமத்தில் நடைபெற்ற முகாமுக்கு, சேத்துப்பட்டு வட்டாட்சியர் சுதாகர் தலைமை வகித்தார். சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் ஹரிதாஸ், மண்டல துணை வட்டாட்சியர் சேகர், வட்ட வழங்கல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய் ஆய்வாளர் ஜீவா வரவேற்றார்.
 மாவட்ட திட்ட அலுவலர் ரங்கநாயகி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு 38 பயனாளிகளுக்கு பட்டா மாற்றம், உழவர் பாதுகாப்பு அட்டை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளை வழங்கி, சிறப்புரையாற்றினார்.
 இதில், வருவாய் ஆய்வாளர் பிரியா, குறு வட்ட அலுவலர் கணேஷ், கிராம நிர்வாக அலுவலர்கள் செந்தில்குமார், துரை, ராஜீவ் காந்தி, இந்துமதி, அருண்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 போளூர்: போளூர் வட்டம், ஓகூர் ஊராட்சியில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. முகாமுக்கு வட்டாட்சியர் ஜெயவேலு தலைமை வகித்தார். சமூக பாதுகாப்புத் திட்ட அலுவலர் பாலாஜி, மண்டல துணை வட்டாட்சியர் தட்சணாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய் ஆய்வாளர் தெய்வநாயகி வரவேற்றார்.
 ஆரணி கோட்டாட்சியர் மைதிலி, 108 பயனாளிகளுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கினார். கிராம நிர்வாக அலுவலர்கள் கௌரி, செந்தில், கலிஜா, வேளாண் துணை அலுவலர் ஏழுமலை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 செங்கம்: செங்கத்தை அடுத்த கரியமங்கலம் கிராமத்தில் நடைபெற்ற முகாமுக்கு, சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் சங்கரன் தலைமை வகித்தார்.
 வருவாய் ஆய்வாளர் பாலருணாஉதயம் முன்னிலை வகித்தார். கரியமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் கமலஹாசன் வரவேற்றார்.
 சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை கோட்டாட்சியர் ஸ்ரீதேவி கலந்துகொண்டு, 80 பயனாளிகளுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசினார். கிராம நிர்வாக அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, குணாநிதி, பரசுராமன், சதீஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
 செய்யாறு: செய்யாறு வட்டம், கொருக்காத்தூர் கிராமத்தில் நடைபெற்ற முகாமுக்கு, திருவண்ணாமலை மாவட்டப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் லாவண்யா தலைமை வகித்தார்.
 நிகழ்ச்சியின்போது, வேளாண் துறை சார்பில் 5 விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருள்களும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை சார்பில் 3 பேருக்கு சலவைப் பெட்டியும், வருவாய்த் துறை சார்பில் வீட்டுமனைப் பட்டா, பட்டா மாற்றம், விதவைச் சான்று உள்பட 110 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
 ஏற்பாடுகளை வட்டாட்சியர் ஆ.மூர்த்தி, சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் பாபு மற்றும் வருவாய்த் துறையினர் செய்திருந்தனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com