சுடச்சுட

  


  கர்நாடகத்தில் நிகழும் அரசியல் குழப்பங்களுக்கு மத்திய பாஜக அரசே காரணம் எனக் கூறி, சேத்துப்பட்டில் காங்கிரஸார் சனிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
  திருவண்ணாமலை வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் சேத்துப்பட்டு காமராஜர் சிலை அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் வி.பி.அண்ணாமலை தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் எஸ்.அன்பழகன், பன்னீர்செல்வம், தசரதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  நகரத் தலைவர் ஜாபர் அலி வரவேற்றார்.
  பொதுக்குழு உறுப்பினர்கள் ஜெயராமன், பழனி, ராமச்சந்திரன் மற்றும் வட்டாரத் தலைவர்கள், துணை அமைப்புகளின் தலைவர்கள், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai