சுடச்சுட

  


  செங்கம் பகுதியில் குடிமராத்து திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி வெள்ளிக்கிழமை மாலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
  குடிமராத்து திட்டத்தின் கீழ் செ.நாச்சிப்பட்டு, கொட்டகுளம் ஆகிய பகுதியில் உள்ள பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான ஏரிகள் தூர்வாரும் பணி, மதகு சரிசெய்யும் பணி, ஏரி கால்வாய்கள் சீரமைத்தல் பணிகள் கடந்த சில நாள்களாக நடைபெற்று வருகின்றன.  இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, திட்ட அலுவலர் ஜெயசுதா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
  அப்போது, ஆட்சியர் விவசாயிகள், ஏரிப்பாசன சங்க நிர்வாகிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும், பணிகளைத் தரமாக, விரைவாக செய்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
  பொதுப்பணித் துறை உதவி செயர்பொறியாளர் சுப்பரமணியன், உதப்வி பொறியாளர்கள் ராஜாராம், சக்திசெல்வன், செங்கம் வட்டாட்சியர் பார்த்தசாரதி உள்பட அரசுத் துறை அதிகாரிகள் உடனிருந்தனர். 
  அதைத் தொடர்ந்து கொட்டகுளம் அரசு உயர்நிலைப் பள்ளி சத்துணவு மையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai