சுடச்சுட

  

  திருவண்ணாமலை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை காலை வரை அதிகபட்சமாக, போளூரில் 98.40 மில்லி மீட்டர் மழை பதிவானது.
  திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக அவ்வப்போது திடீர், திடீரென மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை காலை வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதில் மாவட்டத்திலேயே அதிகபட்சமாக போளூரில் 98.40 மில்லி மீட்டர் மழை பெய்தது.
  இதுதவிர, ஆரணியில் 24.6 மி.மீ, செங்கத்தில் 46.6, சாத்தனூர் அணைப் பகுதியில் 13.6, வந்தவாசி பகுதியில் 16, போளூரில் 98.4, திருவண்ணாமலையில் 14.4, தண்டராம்பட்டில் 7, கலசப்பாக்கத்தில் 65, சேத்துப்பட்டில் 37, கீழ்பென்னாத்தூரில் 17.4 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. 
  குறிப்பாக, சனிக்கிழமை அதிகாலை பெய்த பலத்த  மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்தது ஓடியது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai