சுடச்சுட

    

    போளூர், சேத்துப்பட்டு பகுதியில் பலத்த மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

    By DIN  |   Published on : 14th July 2019 01:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    போளூர், சேத்துப்பட்டு பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    திருவண்ணாமலை மாவட்டத்தில் போளூர், சேத்துப்பட்டு, களம்பூர் ஆகிய பகுதிகளில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வந்தது. மேலும் அனல் காற்றும் வீசியது. மழையின்றி வெயிலின் தாக்கத்தால் நிலத்தடிநீர்மட்டம் குறைந்து கால்நடைகளுக்கு மட்டுமன்றி மனிதர்களுக்கும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வந்தது. 
    இந்த நிலையில், போளூரை அடுத்த வெண்மணி, வசூர், சேத்துப்பட்டு அருகே ஆத்துரை, சித்தாத்துரை, ராந்தம், பெரணம்பாக்கம், கொம்மனந்தல், மண்டகொளத்தூர், தேவிகாபுரம் என இரு வட்டங்களிலும் உள்ள பகுதிகளில்  வெள்ளிக்கிழமை 
    இரவு திடீரென மழை பெய்தது.  சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த பலத்த மழையால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. பூமி குளிர்ச்சியடைந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai