சுடச்சுட

  


  மின்சார சட்டத் திருத்த மசோதாவை அரசு கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு வலியுறுத்தியது.
  வந்தவாசியில் சனிக்கிழமை நடைபெற்ற அந்த அமைப்பின் 11-ஆவது திருவண்ணாமலை வட்டக் கிளை மாநாட்டில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  மின் வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். திருவண்ணாமலை மின்பகிர்மான வட்டத்தை இரண்டாகப் பிரித்து ஆரணியை தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டம் தொடங்கப்படும் என்ற அறிவிப்பை செயல்படுத்த வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
  மாநாட்டுக்கு வட்டத் தலைவர் ஆர்.சிவராஜ் தலைமை வகித்தார். துணைத் தலைவர் எ.பெருமாள் மாநாட்டு கொடியேற்றினார். மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.கண்ணன் முன்னிலை வகித்தார். இணைச் செயலர் எஸ்.இரவி வரவேற்றார். வட்டச் செயலர் கே.காங்கேயன் செயலர் அறிக்கை வாசித்தார். பொருளாளர் எம்.பாலாஜி வரவு, செலவு அறிக்கை தாக்கல் செய்தார்.
  மண்டலச் செயலர் டி.பழனிவேல் தொடக்க உரையாற்றினார். மாநில துணைப் பொதுச் செயலர் டி.ஜெய்சங்கர் சிறப்புரையாற்றினார். மாநாட்டில் இரா.பாரி, ஜா.வே.சிவராமன், அ.ஏ.அருணாசலம், இரா.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
  பின்னர், வட்ட புதிய தலைவராக கே.காங்கேயன், செயலராக எம்.பாலாஜி, பொருளாளராக வி.எம்.வெங்கடேசன் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். கோட்டச் செயலர் ஜி.ராஜா நன்றி கூறினார். 
  முன்னதாக, வந்தவாசி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் அருகே தொடங்கிய மாநாட்டு பேரணி ஆரணி சாலை வழியாக மாநாட்டு அரங்கம் சென்றடைந்தது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai