மனுநீதி நாள் முகாமில் நலத் திட்ட உதவிகள்
By DIN | Published On : 18th July 2019 01:23 AM | Last Updated : 18th July 2019 01:23 AM | அ+அ அ- |

கீழ்பென்னாத்தூரை அடுத்த கோணலூர் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு மனுநீதி நாள் முகாமில் 59 பேருக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
முகாமுக்கு கீழ்பென்னாத்தூர் வட்டாட்சியர் சி.ஜெயபிரகாஷ் நாராயணன் தலைமை வகித்தார். சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் ராம்பிரபு முன்னிலை வகித்தார். மண்டல துணை வட்டாட்சியர் ஆர்.ஜெகதீசன் வரவேற்றார். மாவட்ட வழங்கல் அலுவலர் கி.அரிதாஸ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு 59 பேருக்கு நத்தம் பட்டா மாறுதல், நிலப்பட்டா மாறுதல், உள்பிரிவு பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப் பட்டா உள்பட பல்வேறு அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கினார். முகாமில், வட்ட சார்-ஆய்வாளர் எம்.முனியன், குறு வட்ட அளவர் சென்னையன், மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் ஏ.அருள்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.