வேடந்தவாடி ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயிலில் ஆடிக் கிருத்திகைத் திருவிழா
By DIN | Published On : 24th July 2019 09:06 AM | Last Updated : 24th July 2019 09:06 AM | அ+அ அ- |

திருவண்ணாமலையை அடுத்த வேடந்தவாடி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில், 71-ஆம் ஆண்டு ஆடிக் கிருத்திகை தேர்த் திருவிழா வெள்ளிக்கிழமை (ஜூலை 26) நடைபெறுகிறது.
விழாவையொட்டி, வியாழக்கிழமை (ஜூலை 25) மாலை 6 மணிக்கு நகைச்சுவை பட்டிமன்றம் நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை (ஜூலை 26) காலை 11 மணிக்கு மேள-தாளங்களுடன் தேர்த் திருவிழாவும், இரவு 7 மணிக்கு வாணவேடிக்கையுடன் முத்துப் பல்லக்கில் சுவாமி வீதியுலாவும், 10 மணிக்கு சமூக நாடகமும் நடைபெறுகிறது.
சனிக்கிழமை (ஜூலை 27) மாலை 5 மணிக்கு இன்னிசைக் கச்சேரி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், கிராம மக்கள் செய்து வருகின்றனர்.